வரட்சியினால் ஒன்பது இலட்சம் பேர் பாதிப்பு!

Tuesday, March 14th, 2017

நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதாகவும், இதனால் சுமார் ஒன்பது இலட்சம் பேர் கடும் உணவுப் பாதுகாப்பின்மைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் ரொய்ட்டர் செய்தியை மேற்கோள் காட்டி உலக உணவுத் திட்ட நிறுவனம் செய்தி  வெளியிட்டுள்ளது.

அரச முகவர் நிறுவனங்கள் மற்றும் நிவாரண அமைப்புக்கள் இணைந்து, கடந்த பெப்ரவரி மாதம் நடத்திய ஆய்வில், வறட்சியால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அந்தக் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் கடன் சுமை ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெல் அறுவடைப் பதிவுகளின்படி, வழக்கத்தையும் விட சுமார் 63 சதவீதம் குறைவான அளவு அறுவடையே பதிவாகியிருப்பதாகவும், இது கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒருபோதும் ஏற்படாத ஒரு நிலை என்றும் ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கடும் உணவுப் பற்றாக்குறைக்கும், கடன் சுமைக்கும் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  இந்த ஆய்வு அறிக்கை இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: