அனைத்து பாடசாலைகளும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது – கல்வி அமைச்சு !

Tuesday, September 8th, 2020

நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கை இன்றுமுதல் வழமை போன்று நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதற்கு முன்னர் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய இன்றுமுதல் வழமையான முறையில் கல்வி நடவடிக்கைகளை சுகாதார வழிமுறைகளுக்கு அமைய முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை வளாகத்திற்குள் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிள்ளைகளுக்கு, காய்ச்சல், தடுமல் இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு பெறறோர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: