அனைத்து இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரதன பகிரங்கம் கோரிக்கை!

Wednesday, September 14th, 2022

சர்வதேச நிறுவனங்களின் தேவைகளை தோற்கடிக்க வேண்டுமாயின் இலங்கையர்கள் என்ற வகையில் ஓரணியில் திரள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவரதன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுயுள்ளார்.

உலகில் இந்தியர்கள், இந்தியர்கள் என்ற வகையில் ஒன்றிணைகின்றனர். ரஷ்யர்கள், ரஷ்யர்கள் என்ற வகையில் ஒன்றிணைகின்றனர். சீன மக்களும் தமது தேசிய அடையாளத்திற்காக ஒன்றிணைகின்றனர்.

இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். இந்த விடயத்தில் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிளும் இணைந்து தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்க அனைவரும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

நாட்டிற்கு தேவையான தேசிய தலைமைத்துவம் நாட்டில் தற்போது உள்ளது. ரணில் விக்ரமசிங்கவை கண்டால் உலக நாடுகள் பயப்படும்.

ரணில் விக்ரமசிங்கவினால், ஒரு நாட்டை கையாண்டு அதனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது - மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர்...
விவசாயத்தில் தன்னிறைவு காண இளைஞர்களை ஈர்க்கும் புதிய விவசாய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் -...
ஓகஸ்ட் மாதம் முதல் கட்டணமீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபடமுடியாது - !யாழ்அரச அதிபர் அறிவிப...