அனுமதிப்பத்திரம் பெறுவோரின் தொகை குடாநாடடில் அதிகரிப்பு!

Thursday, February 16th, 2017

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வாகன அனுமதிப்பத்திரம் (லைசென்ஸ்) வழங்கும் தேவைகள் அதிகமாக உள்ளதாக யாழ் மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து  திணைக்களம் தெரிவித்துள்ளது.

2015ம்ஆண்டு நடுக்காலப்பகுதயில் இருந்து 2016ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதி வரை 8502 வாகனஅனுமதிப் பத்திரங்கள் வழங்க ப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் வை.பரந்தாபன் தெரிவித்து ள்ளார்.

10126 பேர் சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக விண்ணப்பித்து இருந்தனர்.அவற்றில் வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான செயல் முறைப் பரீட்சை,எழுத்து மூலமான பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த 8502 பேருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ் மாவடத்தில் அதிகரித்துள்ள வாகனப் பரம்பலின் காரணமாக எதிர்வரும் காலத்தில் இந்த வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் தேவை அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.மேலும் வாகனங்களுக்ககான பெயர் மாற்றத்துடன் கூடிய வாகன இலக்கத் தகடுகள்  496 வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

timthumb

Related posts: