அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடி அதிகரிப்பு –    தடுத்து நிறுத்த பின்னடிக்கும் அதிகாரிகள் –

Wednesday, November 15th, 2017

அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளில் சட்டவிரோத தங்கூசி வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் கட்டுப்பாடின்றி தொடர்வதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இப் பகுதியில் வெளிப்படையாகவே தங்கூசி வலைகளைக் கொண்டு மீனவர்கள் பலர் தொழிலில் ஈடுபடும் நிலையில் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகளோ பராமுகமாக செயற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

சாதாரண நைலோன் வலைகளை பயன்படுத்தி தொழிலில்; ஈடுபடுபவர்கள் இச் சட்டவிரோத தங்கூசி தொழிலால் நாளாந்தம் பாதிக்கப்படுவதோடு குறித்த செயற்பாடு தொடர்பில் உரிய பகுதி கடற்றொழிலாளர் சங்கங்கள் எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த செயற்பாட்டால் மீன்வளம் அருகிச் செல்லும் நிலையில் இதனை விரைந்து கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: