அந்தமான் அருகே காற்றழுத்தம்: இது புயலாக மாறக்கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

Tuesday, January 3rd, 2017

வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு  முன்பு உருவான காற்று சுழற்சி  மெல்ல வலுப்பெற்று தற்போது காற்றழுத்தமாக மாறியுள்ளது. இது  தற்போது அந்தமானுக்கு தெற்கு மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்தம் நேற்று இரவு மேலும் வலுவடையத் தொடங்கி, இலங்கைக்கு கிழக்கு பகுதிக்கு  நகர்ந்து வந்துள்ளது என்றும் இன்று அது வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு நிலையம் குறிப்பிடடுள்ளது .

d37d121665feccdfb73f59aadc055257_XL

Related posts: