அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வர்த்தக அமைச்சு அதிரடி நடவடிக்கை – 2 கோடிவரை அபராதம் அறவிடப்படும் என அறிவிப்பு!

Sunday, September 5th, 2021

சீனி மற்றும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படலாம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அபராத தொகை இதுவரையில் 2 ஆயிரத்து 500 ரூபாயாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் 75 புதிய திருத்தங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அதிகாரங்களுக்கமைய சீனி மற்றும் அரிசியை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற பொருட்கள் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts:


இஸ்ரேலில் உள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தூதரகம் அவதானத்துடன் உள்ளது - தொழில் மற்றும் வெள...
ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழ...
ஓய்வுபெற்று வெளிநாடு சென்ற ஆசிரியர்கள் - அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 13,000 வெற்றிடங்களுக்கு ப...