அதிகரித்த வேகத்தால் A-9  வீதியில் கோர விபத்து: நெடுந்தீவு இளைஞன் பரிதாப பலி!

Friday, October 14th, 2016

ஏ- 9 பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் நெடுந்தீவை சேர்ந்த தர்மதுரை பகீரதன் (24 ) என்பவரே உயிரிழந்தள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் யாழ்.நகரில் இருந்து ஏ9 பிரதான வீதியில் வேகமாக பயணித்துள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டையிழந்து ஏ 9 பிரதான வீதியின் மாம்பழம் சந்திக்கு அண்மையில் வீதியின் அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இதனால் தலைப்பகுதியில் பலத்தகாயமடைந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்திருந்தாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.668.160.90


அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!
காலநிலையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வல்லரசு நாடுகள் உதவவேண்டும்!
மருதானை பொலிஸ் அதிகாரி தற்கொலை தொடர்பில் தீவிர விசாரணை!
டெங்கு தொற்றிலிருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்  - ஜனாதிபதி!
இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் !