அடுத்த சில மாதங்களில் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியனைத் தாண்டும் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Thursday, August 10th, 2023

அடுத்த சில மாதங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியன் ரூபாவை தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிகார சபையின் பொது முகாமையாளர் இதனை அறிவித்துள்ளார். அதற்கான முறையான வேலைத்திட்டத்தை அதிகாரசபை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 1 வருடங்களுக்கு முன்னர் கடன் மீளப்பெறுதலில் மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, தற்போது மாதாந்த இலக்கான 300 மில்லியன் கடன் வசூலை தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: