அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பணிகள் ஆரம்பம்!

Monday, August 7th, 2017

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் அனைத்து அமைச்சுகளினதும் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு விபரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வரவு செலவு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டின்போது அனைத்து நிறுவன பிரதிநிதிகளினதும் பொதுமக்களதும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

மதிப்பீட்டு தகவல்களுக்கு அமைய அடுத்த வருட வரவு செலவு திட்டம் 2 ஆயிரத்து 98 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.இந்த வருட செலவீனங்களுக்காக இரண்டாயிரத்து 732 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதேவேளை நேரடி வரி அறவீடு மூலம் வரவேற்கத்தக்க வருவாயினை பெறுவதுடன் சிறந்த வரி பெறும் முறைமையாகவும் அது அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: