நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் – மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Thursday, November 11th, 2021

நாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றத் தவறும் பட்சத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்புடன், இந்தத் துரதிர்ஷ்டமான நிலைமையை நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியும் எனவும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது, வெற்றிகரமான முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையால் சுகாதார வழிகாட்டுதல்களின்படி வாழ்வதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொற்று நோய் மிக நீண்ட காலமாகத் தொடர்ந்தது என்றும் இதனால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும், பலர் சிரமத்துக்குள்ளாகலாம் என்றும் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: