அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

Monday, December 13th, 2021

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் மற்றும் மின்சார கட்டமைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம தெரிவித்துள்ளார்

அத்துடன் இன்று பிற்பகல் 4 மணிமுதல் நாளை நள்ளிரவு வரை இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக அஞ்சல் திணைக்கள சேவையில் பாரிய குறைபாடுகளுள்ள போதிலும் அவை இன்னும் தீர்க்கப்படாதுள்ளன.

2006 ஆம் ஆண்டு சுற்றுநிருபத்தின்படி சேவை முரண்பாடு பாரியளவில் உள்ளது. திணைக்களத்தின் சில பணிகள் வேறு திணைக்களத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே இவ்வாறான பல பிரச்சினைகளுக்கான தீர்வினை கோரியே குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக அஞ்சல் மற்றும் மின்சார கட்டமைப்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சாந்த குமார மீகம குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு செப்டெம்பர் முதல் நேரடி விமான சேவை - இராஜாங்க அமைச்சர் அசோக் அப...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தள்ள...
நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்பு...