அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் வலியுறுத்து!
Saturday, September 26th, 2020அக்கரை சுற்றுலா மையத்தில் கலாச்சார சீரழிவினை தடுக்க பொலிஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினரும் குறித்த பிரதேசத்தின் நிர்வாக செயலாளருமான இராமநாதன் ஐங்கரன் வலியுறுத்தியுள்ளார்.
வலி கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
அக்கரை சுற்றுலா மையத்திற்கு வருபவர்கள் எவ்வாறான கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டுமென்ற அறிவுறுத்தல் வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை சரியா முறையில் நடைமுறைப்படுத்தப்படாது விட்டால் அவ் சுற்றுலா மையத்தினை மூட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.
குறித்த முன்மொழிவை ஏற்றுக் கொண்ட தவிசாளர் உடனடியாக கண்காணிப்பு கருவி பூட்டுவதாகவும் பொலிஸ் பாதுகாப்பு போடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொண்டமனாறு பாலமானது இருள் சூழ்ந்து காணப்படுவதாக சபையில் கூறிய போது. அவ் விடத்திற்கு விரைவாக மின்விளக்கு ஒன்றினை பொருத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|