38 வேட்பாளர்கள் உட்பட 342 பேர் கைது

Wednesday, January 31st, 2018

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் இம்முறை இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 26 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் இது தொடர்பாக 16 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி டிசம்பர் 9 ஆம் திகதி முதல்  திங்கட்கிழமை நண்பகல் வரை 468 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவற்றுள் 345 தேர்தல் முறைப்பாடுகளும் 123 தேர்தலுக்கான விதிமுறைகளை மீறிய சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts: