நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து புதிய கொள்கை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Saturday, November 21st, 2020

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை உள்ளடக்கப்பட்ட புதிய கொள்கை தயாரித்து சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொரோனா தொற்றால் அதிக ஆபத்து, அவதானமிக்க மற்றும் சாதாரண இடங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான சுகாதார வழிகாட்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடு, பாடசாலை உட்படக் கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளைச் சுகாதார பாதுகாப்புடன் செயற்படுத்தும் முறைகளும் அந்த சுகாதார வழிகாட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்

அதில் முழுமையான மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்ற நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி நோக்கிக் கொண்டு செல்லும் வகையில் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்து இந்த சுகாதார வழிகாட்டியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொவிட் தொற்றை எதிர்கொள்ள புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர் மருத்...
பண்டங்கள் - சேவைகளுக்கு வரி அமுலாகும் விதம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் – அரச ஊழியர்களுக்கு இ...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாள 33,961 டெங்கு நோயாளர்கள்- சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிகளுக்கும் 5000 கொடுப்பனவு – அரசு தீர்மானம்!
14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு 6 மாத காலங்களுக்கு ம...
செயலிழந்த நிலையில் 78 புகையிரத இயந்திரங்கள் - இரத்மலானை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக தக...