வீட்டுக்குள்  புகுந்து குடும்பஸ்தரைத் தாக்கிக் காயப்படுத்திய சந்தேகநபர் கைது!

Friday, May 12th, 2017

யாழ் . மானிப்பாயில் இரவு வேளை வீட்டுக்குள்  புகுந்து குடும்பஸ்தரொருவைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் மானிப்பாய்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம்-30 ஆம் திகதி இரவு வேளையில் மானிப்பாய் உச்சாளைப் பகுதியில் இரவு வேளையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில் குடும்பஸ்தரொருவர் காயங்களுக்கு இலக்காயிருந்தார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்  அடிப்படையிலேயே  குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(09) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

Related posts: