விசா வழங்கும் கொழும்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு?

Wednesday, April 24th, 2019

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பல நாடுகளுக்கு விசா வழங்கும் கொழும்பு நிலையங்கள் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான விசா சேவை வழங்கும் IVS Lanka நிறுவனம் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு விசா வழங்கும் VFS Global நிலையம் என்பன மூடப்பட்டுள்ளன.

மலேசியா, தாய்லாந்து மற்றும் சீன தூதரகத்தில் இணைக்கப்பட்டுள்ள விசா நிலையங்களும் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடந்த தொடர்பு குண்டுவெடிப்புக்களை அடுத்து விசா வழங்கும் மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts: