பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம் – சங்கத்தின் பொதுமுகாமையாளர்!

Wednesday, May 17th, 2017

பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த உற்பத்திப்பொருளாக பனை வெல்லம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புலம்பெயர்வாழ் மக்கள் முன் பதிவுகள் மூலம் அதிகளவில் பனை வெல்லங்களை கொள்வனவு செய்து வருவதாகவும் எஸ்.துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னைய காலங்களில் உள்ளூர் மக்கள் பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் கூடிய நாட்டம் காட்டுவதில்லை என்றும் தற்போது அவர்களும் ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவித்த அவர் இந்த வருடம் 30 ஆயிரம் வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது ஒரு கிலோ வெல்லம் 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெல்லங்களை கொள்வனவு செய்ய விரும்புவோர் ஏ9 வீதி கரடிப்போக்கு சந்தி கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலயத்திலோ அல்லது முல்லைத்தீவு வீதி கண்டாவளை சந்தியில் அமைந்துள்ள வெல்ல உற்பத்தி நிலையத்திலோ கொள்வனவு செய்ய முடியும் எனறும் தெரிவித்துள்ளார். அத்துடன் புலம்பெயர்வாழ் மக்கள் 021 4924 218 என்ற எமது தலைமைக் காரியாலய தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 021 4924 221 என்ற வெல்ல உற்பத்தி நிலையத்தின் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு பமுன் பதிவுகள் செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: