வாஸ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை!
Monday, September 19th, 2016மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன அவரது மனைவி, மகன் உள்ளிட்ட ஏனைய ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மரண தண்டனை கைதிகளாக உள்ள வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வரைத் தவிர ஏனையவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இதற்கமைய, இந்த வழக்கில் மனைவி மற்றும் ஐவருக்கும் 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை, 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இவ்வழக்கு, எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிபுன ராமநாயக்க என்ற 21 வயதுடைய மாணவன் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|