வலி. கிழக்குப் பிரதேசத்தில் வாழைக்குலைத் திருட்டு அதிகரிப்பு!

வலி. கிழக்குப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாழைக்குலைத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது வாழைப் பழத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வலி. கிழக்குப் பிரதேசத்தின் கோப்பாய் இராச வீதி, நீர்வேலி மேற்கு மாலை வைரவர் கோவிலடி, சிறுப்பிட்டி, நவக்கிரி போன்ற பகுதிகளிலுள்ள வாழைத் தோட்டங்களிலேயே இந்த வாழைக் குலைத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
போக்குவரத்து விதிமுறை மீறல் ஒரு இலட்சம் ரூபா அபராதம்!
கடலில் நெஞ்சுவலி - மீனவர் உயிரிழப்பு !
மாணவிகள் துஷ்பிரயோகம் - பாடசாலை அதிபர் கைது!
|
|