வருகிறது நுண் நிதி சட்டமூலம்! –  பிரதமர்

Friday, July 15th, 2016

2016 -ஜூலை 11 வர்த்தமானி அறிவித்தலின் 2016 இலக்கம் 16 என்ற நுண் நிதி சட்டமூலத்தை அமுல்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள உத்தரவுக்கு அமைய இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், வறிய மக்களின் பெரும்பாலானவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு கடன் வசதிகளை வழங்கும் நுண் நிதி கடன் அமைப்புகள் முதல் முறையாக இலங்கையில் நிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படவுள்ளது.

இது வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் எனவும், வரையறைகள் இல்லாத காரணத்தினால் நுண் நிதி கடன் என்ற பெயரில் சக்விதி, தண்டுவம் முதலி, போன்ற போலி வியாபாரிகள் உருவாகினார்கள்,அவர்களிடம் அப்பாவி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆனால் இதற்கு பின்னர், இவ்வாறான முறைகேடு மோசடிகளுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: