யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 178.21  ரூபாவாகப்பதிவாகியுள்ளது!

Sunday, December 24th, 2017

டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 2.2 வீதம் ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்காக வீடுகளுக்குப் போகத்தடை?

தேர்தல் பிரச்சார நடவெடிக்கைகளின் போது வேட்பாளர்கள் வாக்குக் கேட்டு வீடு வீடாக செல்வது தொடர்பாக்கட்டப்பாடுகளை விதிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி வாக்குக்கேட்ட வீடுகளுக்கு செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடையங்களை அடிப்படையாகக்கொண்டே  கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக  தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள்செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலை தொடர்ந்தே பொலிஸ் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தள்ளார்.

அவர் குறித்து மேலும் தெரிவிக்கையில்;:

தேர்தல் தொடர்பான பிரச்சனைகளில் பிரதான பிரச்சனையாக வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்குக் கேட்கும் செயற்ப்பாடு கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் இது குறித்து நாம் தேர்தல்கள் ஆணைகுழுத்தலைவர்களுக்கு அறிவித்துள்ளோம். ஆகவே விரைவில் நாம் கட்சித்தலைவர்களுக்கு அறிவித்தோம், ஆகவே விரைவில் கட்சித்தலைவர்களுடன் கலந்துரையாடி இந்த விடையத்தை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஒவ்வொருவருக்கும் வீடு வீடாக சென்று வாக்குக்கேட்கும் வாய்ப்புக்கிடைக்கும். எனினும் அவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும். எத்தனை பேர் இவ்வாறு செல்ல முடியும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts: