யாழ். மாவட்டத்தில் பல கூட்டுறவுப் பணியாளர்கள் பணியை விட்டுச் செல்லும் போக்கு அதிகரிப்பு

Tuesday, April 11th, 2017

யாழ். மாவட்டத்தில் பல கூட்டுறவுப் பணியாளர்கள் தமது பணியை விட்டுச் செல்லும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

பணியாளர்களுக்குப் போதிய மாதாந்த சம்பளம் வழங்கப்படாமை, பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அதிகரித்த கெடுபிடிகள், பழிவாங்கல்கள் என்பனவே பணியாளர்கள் பணியை விட்டுச் செல்வதற்கான காரணங்கள் எனக் கூறப்படுகிறது.

கூட்டுறவுச் சங்கங்களில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாமல் பணியாளர்கள் நெருக்கடிக்கு நிலைக்கு உள்ளாக்கப்படுவதால் விரக்தியடைந்த நிலையில் பணியாளர்கள் பணியை விட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: