யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் அதிகரிப்பு – உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!.

Friday, April 5th, 2024

யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதனை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வெண் ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடு, நேற்றைய தினம் யாழ். கோண்டாவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட விலக்கியல்துறை பேராசிரியர் ஆர். ஞானேஸ்வரன், வட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ் திருநெல்வேலி விவசாய ஆராய்சி நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் டீ.பாலகௌரி, யாழ் திருநெல்வேலி விவசாய ஆராய்சி நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஆர்.ராஜேஸ்கண்ணா, தென்னை பயிர் செய்கை சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

.

Related posts: