யாழ். மாநகர சபையின் எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு திங்கள் ஆரம்பம்!

Sunday, November 6th, 2016

யாழ். மாநகர சபையின் எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள யாழ். நகர்-02 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு நாளை திங்கட்கிழமை(07) முதல் 16 ஆம் திகதி வரை விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

இவ் வளர்ப்பு நோய்களுக்கான உரிமக் கட்டணமாக 30 ரூபா செலுத்தப்பட வேண்டும்.  இதன்படி நாளை மறுதினம் திங்கட்கிழமை(07) முற்பகல்-09 மணி முதல் 11 மணி வரை யாழ்.அத்தியடிப் பிள்ளையார் கோவிலடி, முற்பகல்-11 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ். ஸ்ரான்லி வீதிப் பெற்றோலியக் கூட்டுத் தாபனம் முன்பாக, பிற்பகல்-02.30 மணி முதல் பிற்பகல்-04 மணி வரை யாழ். பருத்தித் துறை வீதி குருநாதர் சுவாமி கோவிலடி ஆகிய பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பைத் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

17_images

Related posts: