யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில்!

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை(30) காலை-08 மணி முதல் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ். போதனா வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் இன்று காலை முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள் வழங்க முயற்சி!
முல்லைச் சிறார்களின் வரலாற்று சாதனை!
பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|