யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Friday, August 6th, 2021

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர் என்று போதனா வைத்திய சாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த ஏழாலையைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் புங்குடுதீவைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: