சமூக இடைவெளி தொடர வேண்டும்! இல்லையேல் ஆபத்து – எச்சரிக்கும் ஆய்வு!

Thursday, April 9th, 2020

கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக இடைவெளிக்கான செயற்பாடுகளை நீக்குவது மிக ஆபத்தானது என ஹொங்கொங் பல்லைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் உலகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


சீனாவில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக இடைவெளி தொடர்பான வேலைத்திட்டம் காரணமாக அங்கு கொரோனா நிலைமை கட்டுப்படுத்தப்பட்டாலும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், மக்கள் சாதாரணமாக ஒருவரோடு ஒருவர் நெருங்கி செயற்பட ஆரம்பித்தால், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவது கட்டாயம் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு சம்பந்தமாக பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிகையிடம் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வு குழுவின் உறுப்பினரான ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசப் டி யூ, மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், சாதாரணமாக மக்களை ஒன்று கூட இடமளித்தால், கொரோனாவை கட்டுப்படுத்திய நாடுகளிலும் அது மீண்டும் வேகமாக பரவ ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.


இந்த நிலைமையில், வீடுகளில் இருந்து வேலை செய்தது போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் நாடுகள் தமது பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள், அலுவலகங்களை மீண்டும் திறந்து நடத்தினால் அல்லது மக்கள் வெளியில் கூட்டமாக கூட ஆரம்பித்தால், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இருக்கும் சந்தர்ப்பம் மிக இலகுவாக அழிந்து போகும் எனவும் பேராசிரியர் ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனால், மருந்து கண்டுபிடிக்கும் வரை எந்த நிலைமையாக இருந்தாலும் மக்களை ஒன்றுக் கூட இடமளிப்பது மிகவும் ஆபத்தானது ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை நோய் அறிகுறிகள் தென்படாத நோயாளிகள் மூலம் அந்த வைரஸ் அதிகளவில் பரவியுள்ளமை இந்த ஆபத்தை அதிகரிக்க செய்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: