யாழில் கொள்ளையிட முயன்றவர் மீது அசிட் வீச்சு!

Thursday, January 17th, 2019

யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் பணத்தைக் கொள்ளையிட முயன்றவர் மீது வர்த்தகர் , அசிட் விசிறினார். அசிட் வீச்சுக்கு இலக்கான நாவற்குழியைச் சேர்ந்த நபர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வர்த்தகரும் அசிட் வீச்சினால் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்புடன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் பொங்கல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வர்த்தக நிலையத்தை மூடுவதற்கான ஆயத்தங்கள் செய்தபோது பொருள்கள் வாங்குவது போல வந்த நபர் திடீரெனத் தாக்கிவிட்டு பணத்தை அபகரிக்க முயன்றார்.

தடுத்தபோது தன்னை அச்சுறுத்தியதால் அங்கிருந்த அசிட்டை திருடன் மீது ஊற்றியதாக காயமடைந்த வர்த்தகர் தெரிவித்தார். குறித்த நபரின் கண்ணில் அசிட் பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts: