மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு!

Monday, September 26th, 2016

யாழ்ப்பாணம் மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு மருதங்கேணி கடற்கரையில் வைக்கப்பட்ட நிலையில், இக் கஞ்சாப் பொதிகள் கடற்படை உதவியுடன் கிளிநொச்சி பளை பொலிஸ் மற்றும் மருதங்கேணி பொலிஸாரும் இணைந்து கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ஷ தலைமையிலான பளை பொலிஸ் பரிசோதகர் மினிபுர தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கஞ்சா பொதிகளை கடத்திவந்தவர்கள் அவற்றை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக பளை பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Ganja1-640x410

Related posts: