குடாநாட்டில் இம்முறை குறைவான மழைவீழ்ச்சி!

Friday, November 18th, 2016

இந்த வருடம் நேற்றுவரை யாழ்ப்பாணத்தில் 534.5மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெறப்பட்டுள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி குறைவாகவே உள்ளது என்று திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி  பிரதீபன் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 1,838 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெறப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த அளவு மிகக் குறைவானதே. அந்ந நிலையில் நேற்று முன்தினம் 12.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது. நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரை 11.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது. இந்த மாதத்தில் மாத்திரம் 76.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பெறப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் 757.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பெறப்பட்டது. கடந்த ஓக்டோபர் மாதத்தில் 48 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது. ஆனால் கடந்த வருட ஒக்டோபர் மாதத்தில் 254.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியது. மழை அதிகம் கிடைக்கக்கூடிய இந்த மாதங்களின் அளவீடுகளுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி இவ்வாண்டு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று யாழ்.வலிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் குடாநாடு முழுவதும் நேற்று பரவலாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டது.

IMG_7591-710937

Related posts: