மக்களின் தேவைகளை இனங்கண்டு தீர்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கடமை : ஐங்கரன்

மக்களின் தேவைகளை இனங்காண்பது மட்டுமன்றி அவற்றுக்கு உரியவகையில் தீர்வு காண்பதுமே கட்சியின் தலையாய கடமையாக இருக்கின்றது.
அந்த வகையிலேயே கிடைக்கின்ற வாய்ப்புகளினூடாக மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முடிந்த வரையில் முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம். கிழக்கு நிர்வாகச் செயலாளர் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மக்களின் தேவைகள் மட்டுமன்றி நலன்சார் விடயங்களிலும் உரிய கவனம் செலுத்தி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
நாம் மக்களுடன் நின்று மக்கள் சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் அரசியல் கட்சி என்ற வகையில் கிடைக்கப் பெறும்; வாய்ப்புகளையும், சந்தர்ப்பங்களையும் உரியமுறையில் பயன்படுத்துவதற்கு எப்போதும் தயாராகவும் இருக்கின்றோம்.
கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் மக்களுடன் நின்று மக்கள் பணிகளை முன்னெடுப்பதில் எமக்குச்சாதகமாகவும் பேருதவியாகவும் இருக்கிறது.
Related posts:
|
|