வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்ற சித்திராப் பூரணை நிகழ்வில் 500 பேர் பிதிர்க்கடன் நிறைவேற்றினர்

Friday, April 22nd, 2016

சித்திராப் பூரணை நிகழ்வுகள் நேற்று  (21-) வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் நடைபெற்றுள்ளது. அதிகாலை-5.45 மணியளவில் வில்லூன்றி வீரகத்தி விநாயகர்  ஆலயத்தில் விசேட அபிஷேக பூஜையும் அதனைத் தொடர்ந்து காலை- 7 மணியளவில் வசந்த மண்டபப் பூஜையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் வில்லூன்றித் தீர்த்தக் கரைக்கு  எழுந்தருளி புனித தீர்த்தத்தில் தீர்த்தமாடினார். விநாயகப் பெருமான் தீர்த்தமாடிய பின்னர் அடியார்கள் புனித தீர்த்தத்தில் தீர்த்தமாடி இறந்த தமது அன்னையரை நினைத்துப் பிதிர்க் கடன்களை நிறைவேற்றினர்.

வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் சித்திராப் பூரணை நிகழ்வுகளுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதன் போது 500 வரையானோர் கலந்து கொண்டு தீர்த்த சங்கற்பம் செய்து தீர்த்தமாடியதுடன் , பிதிர்த் தர்ப்பணங்கள் செய்து கொண்டதாகவும் ,பிதிர்க் கடன்களை பத்து வரையான குருக்கள்மார் மற்றும் சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டு நிறைவேற்றி வைத்ததாகவும் தெரிய வருகிறது.5a1175bf-ee23-48b7-b7e9-10c031d886fe

சித்திரைப் பெளர்ணமித் தினத்தில் இறந்த தாயை நினைத்தும், ஆடி அமாவாசையில் இறந்த தந்தையை நினைத்தும் பிதிர்க் கடன் செய்ய வேண்டியது இந்துக்களாகிய நம் ஒவ்வொருவரினதும் முக்கிய  கடமையாகும் “இறந்த மூதாதையர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள்”  . அவர்களின் ஆசிர்வாதம் இருந்தால் வாழ்வில் எமக்குப்  பெரும் துன்பங்கள் எதுவும் ஏற்படாது  அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதன் மூலமே  நாம் மகிழ்ச்சியாக வாழலாம். பிதிர் தோஷ நிவர்த்தி  நாம் ஒவ்வொருவரும் எம் வாழ்நாளில் தவறாது செய்ய வேண்டிய கடமை .இதனை வருடாவருடம்  தவறாது நாம்  செய்து வரும் போதே எமது வம்சம் விருத்தியடையும்.  ஆண்டுத் திவசங்கள் செய்வதற்குத் தேவையான நிதிகள் போதியளவு  கிடைக்காவிடிலோ , அல்லது வாய்ப்புக்கள் அமையாவிட்டாலோ  சித்திராப் பெளர்ணமி மற்றும் ஆடி அமாவாசை செய்தாலே இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் என பிதிர்க் கடன்களை நிறைவேற்றி வைத்த நல்லூர் மூத்த விநாயகர் ஆலயப் பிரதம குரு பால செல்வவேந்தன் குருக்கள் தெரிவித்தார்.

Related posts: