இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் விரைவில் மக்கள் பாவனைக்கு !

Thursday, December 30th, 2021

இலங்கையின் மிக அழகிய மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கி.மீ ஆகும். சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதிப்பைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட இந்த விரைவுச் சாலையானது நகர்ப்புறங்களைத் தவிர்த்து, வெற்று நிலங்கள் வழியாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

4 வழிச்சாலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதி தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களுடன் ஐந்து பரிமாற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்த அதிவேக நெடுஞ்சாலைக்காக 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: