மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாகப் பிரகடனம் – யாழ். இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்!

Thursday, October 5th, 2017

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச அகிம்சை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது மகாத்மா காந்திக்கு சர்வதேச அளவில் கிடைத்த உயர் கௌரவமாகும். இது குறித்துப் பெரும் மகிழ்ச்சியடைவதாக யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டிற்கு விடுதலையைப் பெற்றுத் தந்த அண்ணல் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் யாழ். இந்திய துணைத்தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலையடியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

 மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி வருடாவருடம் நாம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள இந்த வீதிக்கும் மகாத்மா காந்தி வீதி என்றுதான் பெயருள்ளது. மகாத்மா காந்திக்கு உரிய மரியாதையைச் செலுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடையதும் கடமை என அவர் மேலும் குறிப்பிட்டு;ள்ளார். இவ் வைபவத்தில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

Related posts: