புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மனு தாக்கல்!

Saturday, October 8th, 2016

பெறுமதிசேர் வரி (VAT) திருத்தத்திற்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்ட மூலத்திற்கு எதிராக, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தள்ளார்.

இதேவேளை, பந்துல குணவர்தன மற்றும் சிசிர ஜயகொடி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறுமதிசேர் வரி திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வரி திருத்த சட்ட மூலத்தின் 1 தொடக்கம் 18 வரையான சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உயர்நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்

asd2

Related posts: