புதிய அரசியல் யாப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கங்கள் கோரப்பட்டுள்ளதா ?

Saturday, June 17th, 2017

புதிய அரசியல் யாப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் யாப்பு குறித்த பொதுக்கருத்துக்களை திரட்டும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து பல்வேறு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இவ்வாறான ஆலோசனையையும் முன்வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: