பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ சீனாவுக்குப் பயணம்!

Wednesday, February 28th, 2018

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த பிரிகேடியர் பிரியந்த பெர்னாண்டோ பயிற்சி பாடநெறி ஒன்றைமேற்கொள்ளவதற்காக சீனா செல்லவுள்ளார்.

5 மாதம் வரை நடைபெறவுள்ள குறித்த பாடநெறிக்காக அடுத்த மாதம் 2ஆம் திகதி சீனாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் எனபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சமிக்ஞை காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

அண்மையில் இது தொடர்பான விசாரணைகளுக்காக இவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: