பிரதமர் இணக்கம்!

Tuesday, July 26th, 2016

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை நிவாரணமாக வழங்குவதற்கு, முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட கம்பனிகளால் கோரப்பட்டுள்ள கடன் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வங்கிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் தீர்வுகாணும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிக தலைமையில் நேற்றுத்(25)  முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிகள் இதில் கலந்துகொண்டனர்.இந்த சந்திப்பில் கலந்துகொண்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிகள்,  தனியார்த் துறையினருக்கு வழங்கும் 2,500 ரூபாய் சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்குத் தாங்கள் தயார், எனினும், தாங்கள் கோரியிருக்கின்ற கடன்தொகையை வழங்குவதற்கு வங்கிகள் ஆக்கப்பூர்வமான நடவடிகைகள் எதனையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போதே, கம்பனிகள் கோரியிருக்கின்ற கடன்தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு, பிரதமர் கட்டளையிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பை வழங்க, திறைசேரி ஒரு பில்லியன் ரூபாயை ஒதுக்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்புத் தொடர்பில் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Related posts: