அனலைதீவு இந்து மயானம்த்தை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள்!

Friday, December 1st, 2017

அனலைதீவு இந்து மயானம் குப்பை கூளங்கள் நிறைந்து கவனிப்பாரற்று காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்து மக்கள் ஜே – 37 மற்றும் ஜே – 38 கிராம சேவகர் பிரிவுகளில் அதிகமாக வாழ்கின்றனர். சுமார் 550 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

இந்தப் பிரிவுகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனலைதீவின் இறங்கு துறைக்கு அருகாமையில் அமைந்துள்ள பொது இந்து மயானம் காணப்படுகின்றது.

இந்த மயானமே போதிய பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதன் வீதி அருகே அழகாக வளர்ந்திருந்த ஆலமரங்களும் தறிக்கப்பட்டு சில காலங்களாக மரங்கள் அகற்றப்படாமலும் இந்தப் புனித பிரதேசம் காட்சியளித்தது.

இதற்கு பொறுப்பான ஊர்காவற்துறை பிரதேச சபையிடம் அனலைதீவில் அமைந்துள்ள உப பிரதேச சபையினூடாக பொதுமக்கள் முறையிட்ட போதும் தகுந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொது மக்களும் சமூக நலன் விரும்பிகளும் சிரமதானத்தை மேற்கொண்டோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்தப்போக்கை தவிர்த்து அனலைதீவு இந்து மயானத்தை துப்புரவு செய்து தருமாறும் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Related posts: