பாவனைக்கு உதவாத பெருமளவு இறைச்சி யாழ்.நகரில் மீட்பு!

Monday, January 9th, 2017

யாழ்ப்பாணம் பிரதான மாட்டிறைச்சி கடைத்தொகுதியில் மனித பாவனைக்குதவாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கழிவு இறைச்சிகளை யாழ்ப்பாண மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பட்ட தகவலொன்றினையடுத்து விஷேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கடையில் சோதனை செய்ய விடாமல் குழப்பத்தை ஏற்படுத்திய கடை உரிமையாளர் பின்னர் அமைதியாகினர். பின் களஞ்சியறையில் குளிர்சாதன பெட்டியொன்றில் இருந்து சுமார் 120 கிலோ கிராம் இறைச்சி தொகை கைப்பற்றப்பட்டது. முதலில் பரிசோதிக்க எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் பின்னர் அவற்றை வைத்திருந்தமை தவறுதான் என ஒப்புக்கொண்டனர். அதனால் அவர்கள் முன்னிலையில் இவ் இறைச்சி தீ வைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

நேற்று மு;தினம் பண்ணையில் இறைச்சியை சீல் வைக்காது கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்குத் தொடர்ந்தனர். சீல் வைக்கப்படாத இறைச்சி அழிக்கப்பட்டதோடு அதனை வைத்திருந்தவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய சம்பவம் மிக மோசமான சம்பவமாக இருந்தமையை நிலமை உணர்த்தியது. எனினும் இந்த விடயம் நீதிமன்றின் கவனத்திற்க கொண்ட செல்லப்படுமா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. தீவுப் பகுதிகளிலிருந்து கால்நடைகள் கடத்தப்படுகின்றமை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு பிரதேச மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதற்குச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர் எனினும் எதுவும் உரிய முறையில் நடக்கவில்லை என்றே தீவகத்திலுள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

10408560_1557139177875103_4225057691126052208_n1

Related posts: