மாநகரப் பகுதியில் அடுத்த ஆண்டு பல வீதிகள் புனரமைக்கப்படும் – மாநகர ஆணையாளர் வாகீசன் !

Thursday, October 27th, 2016

மாநகர அபிவிருத்தி திட்டத்தில் வீதிகள் புனரமைப்பதற்கு கூடுதலாக கவனம் செலுத்தப்படவுள்ளதால் யாழ்.மாநகரப் பகுதியில் அடுத்த ஆண்டு பல வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதாக மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.

தற்போது மாநகரப் பகுதியில் முக்கிய வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கரையோர பகுதியிலும் அனேகமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டின் அபிவிருத்தித் திட்டத்தில் கூடுதலான வீதிகள் புனரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைவிட சேதமடைந்த வடிகால் வாய்க்காலும் சீர் செய்யப்படும். வீதி புனரமைப்பு தொடர்பாக குழுவும் அமைக்கப்படும் என்றார்.

38901

Related posts:


ஓகஸ்ட் முதலாம் திகதிமுதல் உக்காத இலன்ஸ் சீட் வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை - அமைச்சர் ...
இலங்கை - பஹ்ரைன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதுடன் பொது நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வ...
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு - நீர் ...