ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக நாடாளுமன்றில் அறிவிப்பு!

Thursday, August 10th, 2023

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் இன்றையதினம் நடைபெற்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்..

அத்துடன், ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் விசேட பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: