பலாலி விமானத்தளத்திற்காக சுவீககரித்த காணிகளுக்கு இழப்பீடு!

Monday, March 13th, 2017

பலாலி விமான நிலை­யத்­துக்காக 1952 மற்­றும் 1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­க­ளில் அர­சால் சுவீகரிக்­கப் பட்­டி­ருந்த 956 ஏக்­கர் காணி தொடர்­பில் அதன் உரி­மை­யா­ளர்­களை, காணி அமைந்துள்ள கிராம அலு­வ­லர்­க­ளி­டம் பதி­யு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

பலாலி வானூர்தி நிலை­யம் மற்­றும் இரா­ணுவ முகா­முக்­காக 1952 மற்­றும் 1983ஆம் ஆண்­டு­க­ளில் அர­சால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளுக்­கான இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வில்லை. இவர் க­ளுக்­கான இழப்­பீட்டை வழங்­கும் நோக்­கில் இந்­தக் காணி க­ளின் உரி­மை­யா­ளர்­களை இனம்­கா­ணும் நட­வ­டிக்கை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பலா­லி­யில் கடந்த மாதம், பாது­காப்பு அமைச்­சின் மேல­திக செய­லர் நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லில் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தற்கு அமை­வா­கவே இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அர­சால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட 956 ஏக்­கர் நிலப் பகு­தி­களே, பலாலி கூட்­டுப்­ப­டைத் தளத்­தின் நிரந்­தர நில­மா­க­வும் காணப்­பட்­டது. வானூர்தி ஓடு­பாதை, கட்­டுப்­பாட்டு அறை­கள், கட்­டுப்­பாட்­டுக் கோபு­ரங்­கள் என்­பன மக்­க­ளி­டம் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்த காணி­க­ளில் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. காணி­கள் சுவீ­க­ரிக்­கப்­ப­டும் போது இழப்­பீடு வழங்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த போதும், இது­வரை வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளின் உரி­மை­யா­ளர்­களை இனம் கண்டு அவர்­களைச் சொந்த நிலத்­துக்கு அழைத்­துச் சென்று காண்­பிக்­கப்­ப­டும். அவர்­க­ளுக்­கான இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவை வழங்­கு­வதே இதன் நோக்­கம் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.  இதே­நே­ரம் 1952ஆம் ஆண்டு சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளின்  3ஆவது தலை­மு­றை­யி­னரே தற்­போது வாழ்­வ­த­னால், இவர்­க­ளால் தமது பூர்­வீக நிலத்தை அடை­யா­ளம் காண முடி­யுமா என்ற கேள்­வி­யும் எழுப்­பப்­ப­டு­கின்­றது.

Related posts: