நுங்குகள் பறிப்பதை தடுக்க முடியவில்லை – பனை அபிவிருத்திச் சபை கூறுகிறது!

Wednesday, June 27th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் வியாபார நோக்கத்துக்காக சிலர் பனை மரங்களில் இருந்து நுங்கைப் பறிப்பதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பனை அபிவிருத்திச் சபையின் விரிவாக்க முகாமையாளர் கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அனேகமானவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பனைகளில் நுங்கைப் பறித்து நகருக்குக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

நுங்கு பறிப்பதைத் தடுப்பதற்கு பனை அபிவிருத்தி சபைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றாலும் நுங்கு பறிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் நேரில் சபையால் கேட்கப்பட்டு அதற்கான விளக்கமும் வழங்கப்பட்டது. நுங்கைப் பறிப்பதால் பனை சார்ந்த உற்பத்திகளுக்கே எதிர் காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். அதன் வளங்களின் பெருக்கமும் அருகிச் செல்லும். சபையின் இந்தக் கோரிக்கை விளக்கங்களுக்கு அமைய கிட்டத்தட்ட 90 வீதமானவர்கள் நுங்கு பறிப்பதைக் கைவிட்டுள்ளனர்.

மிகுதியானவர்களும் இந்த நுங்கு பறிப்பதைக் கைவிட்டு பனை வளத்தை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்று சபையின் விரிவாக்க முகாமையாளர் கே.கோபாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.

Related posts: