ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Sunday, December 3rd, 2023

ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தெரணியகல நகருக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள முதியோர் நலன்புரி அலுவலக கட்டிட வேலைகளை ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

ஓய்வுபெற்ற சமூகம், நாட்டுக்கான கடமையை நிறைவேற்றிய குழுவாகும். அவர்களின் நலனில் விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியர்களின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு இவ்வருட வரவு – செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 2500.00 ரூபாவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

மேலும், நீண்டகாலமாக நிலவும் ஓய்வூதியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஓய்வுபெற்ற நற்பணியாளர் சங்கம் வழங்கிய நிதியில் இந்த அலுவலகக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அமைச்சர் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து இதற்கான கணிசமான நிதியையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: