நாட்டில் நெத்தலி கருவாடு உற்பத்தி அதிகரிப்பு!

Thursday, February 22nd, 2018

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீடிப்பதையடுத்து நெத்தலி கருவாடு உற்பத்தியில் பெரும் எண்ணிக்கையான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதுள்ள காலநிலையில் தினமும் அதிக நெத்தலி மீன்கள் பிடிக்கப்படுவதால் அவற்றை கருவாடாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்நடவடிக்கைகளில் உள்ளூர் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நெத்தலி கருவாடு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் நாவலடி, வாகரை, எத்துக்கால, பூநொச்சிமுனை, களுவாதளை ஆகிய கரையோர பிரதேசங்களில்இடம்பெற்று வருகின்றன.

தொகை வியாபாரிகளுக்கு ஒரு கிலோ நெத்திலி கருவாட்டை 750 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: