நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய விஷேட அதிரடிப்படை பிரிவு!

Tuesday, February 7th, 2017

கண்ணீர் கைக்குண்டுகளை பயன்படுத்தி கலகம் அடக்கும் நடவடிக்கையில், ஈடுபடுத்தும் நோக்கில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையில், கலகம் அடக்கும் நோக்கில் புதிய படைபிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலபே தனியார் வைத்தியசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த படைபிரிவினர் கலகம் அடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சுதந்திரதின விழாவின் போதும் இந்த படைப்பிரிவினர் மரியாதை அணி வகுப்பிலும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை, கண்ணீர்ப்புகை மற்றும் வாயுக்களில் இருந்து பாதுகாப்பளிக்கும் நோக்கில் முகத்தை முழுமையாக மூடிய கவசங்கள் மற்றும் கவச உடைகள் தாங்கியதாக இந்த படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

940371382teargas

Related posts: