நாடுகடத்தபட்ட இலங்கையர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

Tuesday, August 23rd, 2016

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆறு இலங்கையர்களும் இன்று(23) நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நிலையில், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுக் கடலில் தத்தளித்த அறுவர், ஆஸி அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இவர்கள் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த மாதம் 21ஆம் திகதி இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இவர்களை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்தனர்.இந்தநிலையில் சந்தேகநபர்கள் அறுவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Related posts: