நல்லூரைச் சேர்ந்த இருவர் கேரள கஞ்சா தொகையுடன் கைது!

Friday, April 6th, 2018

வாகனமொன்றில் கேரள கஞ்சா தொகையினை கடத்திய 2 சந்தேகநபர்களை சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் போது இவர்களிடம் இருந்து 220 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வாகனம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேளை அதனை நிறுத்தி சோதனையிட்ட போதே இந்த கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வாகனத்திற்கு முன்னால் சென்ற சிற்றூர்தியில் பயணித்துள்ளதுடன் அவர் தப்பிச்சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது

Related posts: